என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    2 பெண்களுடனான தொடர்பை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்

    சென்னை புரசைவாக்கத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் வசித்து வந்தவர் வினோத் குமார். இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விவகாரத்து வழக்கும் நடைபெற்று வந்தது.

    பெண் வீட்டார் சமாதானம் பேசி வழக்கை திரும்ப பெற்றதையடுத்து வினோத் குமார்-ஹேமாவதி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் ஹேமாவதி படுகொலை செய்யப்பட்டார்.

    ஹேமாவதியை அவரது கணவர் வினோத்குமாரே கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வினோத்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 2 பெண்களுடன் எனக்கு தொடர்பு இருந்தது. இதனை ஹேமாவதி கண்டித்து தொடர்ந்து என்னிடம் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் வினோத்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முன்னதாக மனைவி மயங்கி விழுந்து இறந்ததாக வினோத்குமார் நாடகம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×