என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    சென்னையில் 17 மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்படவில்லை

    கோடம்பாக்கம் மண்டலத்தில் 10 மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. பள்ளி மைதானம் மற்றும் கட்டிடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் பாதுகாப்பு கருதி வகுப்பு நடத்தப்படவில்லை.
    சென்னை:

    சென்னையில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் மாணவர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது மழை குறைந்ததால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் ஒரு சில பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் பள்ளிகளை திறக்கமுடியவில்லை. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 281 பள்ளிகளில் இன்று 264 பள்ளிகள் திறக்கப்பட்டன. 17 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில் முகாம்கள் செயல்படுவதாலும், மழை நீர் தேங்கி நிற்பதாலும் திறக்க முடியவில்லை.

    கோடம்பாக்கம் மண்டலத்தில் 10 மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. பள்ளி மைதானம் மற்றும் கட்டிடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் பாதுகாப்பு கருதி வகுப்பு நடத்தப்படவில்லை.

    10-வது மண்டலத்தில் கோயம்பேடு, புலியூர், காமராஜ்காலனி, ஈஸ்வரன் கோவில், பிரகாசபுரம் ரோடு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், ஜோன்ஸ்ரோடு பகுதிகளிலும் 4 மற்றும் 6-வது வார்டுகளில் உள்ள கொளத்தூர், அருந்ததி பாளையம் பகுதிகளிலும் 13-வது மண்டலத்தில் உள்ள கோட்டூர், என்.எஸ்.கார்டன், உதயம் நகர் பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் இன்று இயங்கவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரி கூறும்போது, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 6 பள்ளிகள் முகாம்களாக செயல்படுகின்றன.

    தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால் நாளை முதல் இந்த பள்ளிகள் செயல்பட தொடங்கும் என்றார்.

    Next Story
    ×