என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் - பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  13 ஊராட்சி ஒன்றியங்களில் 100 பெண் பயனாளிகளுக்கு 6500 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.
  திருப்பூர்:
   
  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். 

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தமிழகம் முழுவதும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 100 பெண் பயனாளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 38, 800 பெண் பயனாளிகளுக்கு ரூ.75.6 கோடி திட்ட மதிப்பீட்டில் 1.94 லட்சம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்படவுள்ளன. 

  இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 100 பெண் பயனாளிகளுக்கு 6500 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இதில் ஏழை விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற விதவை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

  சொந்த நிலம் இல்லாமலும் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சொந்தமாக ஆடு, மாடு வைத்திருக்க கூடாது. நிரந்தரமாக அதே முகவரியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

  ஆகவே மேற்கண்ட தகுதியுடைய பெண் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று டிசம்பர் 1-ந்தேதி முதல் 9-ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2216960, 88387-46205 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×