என் மலர்

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    அலங்காநல்லூர் அருகே டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மெய்யப்பன்பட்டி - கோட்டைமேடு செல்லும் சாலையில் இன்று காலை வயலில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு அந்தப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.

    மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மற்றும் டி.எஸ்.பி. பாலசுந்தரம், ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் தேனி மாவட்டம் தேவதானம்பட்டி, காமக்காபட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியன் (வயது 39) என்பதும் இவர் மதுரை, ஏர்போர்ட்டில் வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்ப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    பாண்டியன் அலங்காநல்லூர் பகுதிக்கு எப்படி வந்தார்? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×