என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே அரசு பஸ் மோதி பனியன் தொழிலாளி பலி
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது .
பல்லடம்:
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 61). இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திருப்பூர் திரும்புவதற்காக பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story