என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி - 3ந்தேதிக்குள் படைப்புக்களை அனுப்பலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் உள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவியியல் அமைச்சகம் சார்பில் 7-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா டிசம்பர் 10-ந்தேதி கோவாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

  மேலும் தமிழகத்தில் உள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 முதல் பிளஸ்-2 வரையுள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் கலந்து கொள்ளலாம். 

  பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தமிழ் அல்லது ஆங்கில வழியில் மாணவர்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். படைப்புகளை iisfclri@gmail.com என்ற இ-மெயிலுக்கு வருகிற 3-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×