என் மலர்

  செய்திகள்

  அரிவாள் வெட்டு
  X
  அரிவாள் வெட்டு

  வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவருக்கு அரிவாள் வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேதாரண்யம்:

  வேதாரண்யம் மணியன் தீவு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57). மீனவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் மணிராஜா (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோமசுந்தரம் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது மணிராஜா வழிமறித்து தரக்குறைவாக திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடைக்காரர் மணிராஜாவை கைது செய்தனர்.
  Next Story
  ×