என் மலர்
செய்திகள்

விஷம்
நாட்டறம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சொக்கலாம்பட்டி மூக்கனூர் வட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). பீடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சீதா. சபரி, மணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் சீதாவுக்கு உடல் நிலைகுறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சக்திவேல் மதுபோதைக்கு அடிமையாகி அதிகளவில் மது குடித்து வந்தார். இந்நிலையில் சக்திவேல் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 17-ந்தேதி தன் வீட்டுக்குப் பின்புறம் விவசாய நிலத்தில் கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story