search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கார்த்திகை பட்ட கத்தரி நடவு பணிகள் தீவிரம்

    தக்காளி செடிகள் முற்றாக அழுகியதைப்போல கத்தரியில் நடக்க வாய்ப்பில்லை.
    திருப்பூர்:

    ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த கத்தரி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வருவதால் செடிகளில் இருந்த பூக்கள் பெரும்பகுதி உதிர்ந்து விட்டன. 

    செடிகள் காய்கள் இன்றி வெற்றுச்செடிகளாக காட்சி அளிக்கின்றன. மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சந்தைக்கு கத்தரி வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் கத்தரி விலை ஒரு கிலோ ரூ. 140க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    தக்காளியை தொடர்ந்து கத்தரியும் வரலாறு காணாத விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் விவசாயிகள் கூறுகையில், தக்காளி செடிகள் முற்றாக அழுகியதைப்போல கத்தரியில் நடக்க வாய்ப்பில்லை. 

    கத்தரி செடி நேராக வளர்வதாலும் அதன் தண்டுப்பகுதி உறுதியாக இருப்பதாலும் மழையில் இருந்து தப்பி விடுகின்றன. மழை நின்றால் கத்தரி செடிகள் மீண்டும் பூக்கத் துவங்கும். அதன்பின் இரண்டு - மூன்று வாரங்களில் கத்தரி மீண்டும் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. 

    எனவே அதன் பின் விலை குறைந்துவிடும். கார்த்திகை பட்டம் தொடங்கியுள்ளதால் கத்தரி நடவு பணி தொடங்கியுள்ளது. புதிய செடிகள் காய்ப்புக்கு வரும் போது உற்பத்தி அதிகரிக்கும் என்றனர்.
    Next Story
    ×