search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமிர்தவள்ளி கிராமத்தில் வயலில் தேங்கி உள்ள மழைநீரை காணலாம்.
    X
    அமிர்தவள்ளி கிராமத்தில் வயலில் தேங்கி உள்ள மழைநீரை காணலாம்.

    வலங்கைமானில் பரவலாக மழை- மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை

    வலங்கைமான் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதி கன மழை பெய்யவில்லை என்றாலும் குளம் குட்டைகள் அனைத்தும் நிரம்பின. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் வலங்கைமானில் பல இடங்களில் சாகுபடி நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சற்று மழை ஓய்ந்திருந்தது. இதனால் விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அனைத்தும் வடிந்த நிலையில் இருந்தது.

    இந்தநிலையில் நேற்று வலங்கைமானில் கனமழை பெய்ததால் தாழ்வான விளைநிலங்கள் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. புளிக்குடி ஊராட்சி அமிர்தவல்லி கிராமத்தில் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

    மேலும் மாணிக்கமங்கலம், கீழ விடையள், குப்பசமுத்திரம், அரித்துவாரமங்கலம், அவளிவநல்லூர், தென்குவளை வேலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி விளைநிலங்கள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளன. செம்மங்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி நெற்பயிர்கள், கனமழையால் வயலில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×