என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
1098 சைல்டு லைன் எண் மூலம் பாலியல் புகார்களை தெரிவிக்கலாம்
மாணவிகள் தங்களது அச்சத்தை தூக்கிப்போட வேண்டும். தங்கள் மனதை குடையும் பிரச்சினைகளை தைரியமாக வெளியே சொல்ல முன்வர வேண்டும்.
திருப்பூர்:
தெரிந்தவர்கள், உறவினர்கள், மற்றும் நம்பிய சிலரால் ஏற்படும் பாலியல் சீண்டல்கள் மாணவிகளிடையே பெரிதளவில் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் பெற்றோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
கோவை சம்பவத்தை அடுத்து திருப்பூர் பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது:
மாணவிகள் தங்களது அச்சத்தை தூக்கிப்போட வேண்டும். தங்கள் மனதை குடையும் பிரச்சினைகளை தைரியமாக வெளியே சொல்ல முன்வர வேண்டும். புகார் தெரிவித்த மாணவ, மாணவிகளின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்கப்படாது.
பெயரை தெரிவிக்காமலேயே புகார் பதிவு செய்யலாம். புகார் பெறப்பட்டால் அதிகாரிகள் உரிய தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். பள்ளி மாணவர்கள் பள்ளி மட்டுமல்ல, வீடுகள், வெளியிடங்களில், டியூசன், வந்து செல்லும் வழித்தடங்கள் என தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்தால் 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறலாம்.
பெற்றோரை காட்டிலும் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்களிடம் பிள்ளைகளால் இதுபோன்ற சிக்கல்களை கூற முடியும். குறிப்பாக பெண் குழந்தைகள் அனைத்து விஷயங்களையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் நட்பான சூழலை தாய்மார்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






