search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜவாய்க்கால் வழியாக சாமளாபுரம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள காட்சி.
    X
    ராஜவாய்க்கால் வழியாக சாமளாபுரம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள காட்சி.

    ராஜவாய்க்கால் வழியாக சாமளாபுரம் குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

    குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறி குளத்தில் புதிய மழைநீர் தேக்கப்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள சாமளாபுரம் குளம் தூர்வாரி ஆழப்படுத்திய பின் நொய்யல் தண்ணீரால் குளம் நிரம்பியது. உபரிநீர் வெளியேறியதால் பள்ளபாளையம் குளமும் நிறைந்து உபரி நீர் நொய்யலில் பாய்ந்தது. கடந்த ஒரு மாதமாக குளத்துக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டிருந்தது.

    நொய்யலில் மழைநீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருப்பதால் மீண்டும் முறைப்படி குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. அதன்படி சாமளாபுரம் குளத்துக்கு செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    அணையில் வழிந்தோடிய மழைநீர் ராஜவாய்க்கால் வழியாக குளத்தை நோக்கி பாய்ந்து சென்றது. குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறி குளத்தில் புதிய மழைநீர் தேக்கப்படும். அதற்காக தொடர்ச்சியாக குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சாமளாபுரம் குளத்தை தொடர்ந்து பள்ளபாளையம், செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம், மூளிக்குளம், அணைப்பாளையம் குளங்களிலும் மழைநீரை தேக்கி வைக்க திட்டமிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×