என் மலர்
செய்திகள்

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்ட காட்சி.
செல்போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை
சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது.
திருப்பூர்:
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் திருப்பூர் சைல்டு லைன் சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பேசுகையில், ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள்.
நேரடி கல்வி கற்க வழி இல்லாமல் ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் கல்வி முறை தவிர்க்க முடியாததாக ஆனது. சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளம்பெண்களுக்கு இதனால் ஆபத்துகள் அதிகம். செல்போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
Next Story






