என் மலர்
செய்திகள்

கோப்புபடம்.
தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் 15 முதல் 29 வயதுடைய இளைஞர், பெண்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் 15 முதல் 29 வயதுடைய இளைஞர், பெண்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவை துறை, பாடநெறியின் செயல்பாடுகளின் துறை, இளைஞர் மேம்பாட்டுப்பணிகளில் உடல் நலம், ஆராய்ச்சி மற்றும் புதுமை, கலாசாரம், மனித உரிமை, கலை மற்றும் இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் ஸ்மார்ட் கற்றல் அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.
எனவே 2019 -2020ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளுக்கு http://Innovate.mygov.in/national-youth-award-2020 என்ற இணையதள முகவரியில், வரும் 17 -ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story