search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மனிதனின் அனைத்து தேவைகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுத்தும் - தொழில்நுட்ப வல்லுனர் தகவல்

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலைதான் செயற்கை நுண்ணறிவு. அதிகப்படியான தகவல், தொகுத்து வழங்குதல், அதிக தேவைகள் ஆகிய மூன்றும் இதற்கு அவசியம்.
    திருப்பூர்:

    மனித மூளையை மிஞ்சியது செயற்கை நுண்ணறிவு. இந்தியாவில் இது சார்ந்த விழிப்புணர்வு இல்லை என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இன்போசிஸ் நிறுவன முதன்மை தொழில்நுட்ப வல்லுனர் கமல்குமார். 

    இதுபற்றிஅவர் கூறியதாவது:

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலைதான் செயற்கை நுண்ணறிவு. அதிகப்படியான தகவல், தொகுத்து வழங்குதல், அதிக தேவைகள் ஆகிய மூன்றும் இதற்கு அவசியம். 2014-15ல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்ததால் கூகுள், பேஸ்புக் உள்ளிட்டவை உருவாகின.

    நமக்கு தெரிந்தும் தெரியாமலும் செயற்கை நுண்ணறிவை நாம் பயன்படுத்தி வருகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருட்களில் மட்டுமன்றி ராணுவ துறை, தானியங்கி கார், மொழி மாற்றம் உள்ளிட்ட பலவற்றிலும் பயன்பட்டு வருகிறது.

    மனித மூளையை மிஞ்சியது செயற்கை நுண்ணறிவு. கடந்த 2020ல் நடந்த மொழி மாற்றத்துக்கான போட்டியில் 40 லட்சம் இந்தி மற்றும் மராட்டிய வார்த்தைகளை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கியதற்காக இன்போசிஸ் நிறுவனம் உலக அளவில் முதலிடம் பிடித்தது.

    சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தொழில்நுட்பத்தை சீனா கொண்டு வந்தது. இந்தியாவில், இத்துறை சார்ந்த விழிப்புணர்வு இல்லை. ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கும் பலர் அதில் வெற்றி பெற்றாக வேண்டும் என நினைக்கின்றனர். 

    போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் இளைஞர்களுக்கு இது சிறந்த துறை. ஏனெனில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் விளையாட்டும், படிப்பும் ஒன்றாகியுள்ளது. எதிர்காலத்தில் மனிதனின் அனைத்து தேவைகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×