search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லிமலையில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    கொல்லிமலையில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    702 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் - கலெக்டர் பார்வையிட்டார்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கொல்லிமலையில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக 1.11.2021 முதல் 30.11.2021 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும், 13, 14, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், அசக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமைஸ) நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×