search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான லாரிகள்.
    X
    விபத்துக்குள்ளான லாரிகள்.

    காங்கயத்தில் லாரிகள் மோதி விபத்து-4 பேர் காயம்

    காயமடைந்த 4 பேரையும் பொதுமக்கள்-போலீசார் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    காங்கயம்:

    அரியலூரிலிருந்து கோவை நோக்கி சிமெண்ட் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. நள்ளிரவு 1 மணி அளவில் காங்கயம் அருகே வந்துகொண்டிருந்தது. லாரியை டிரைவர் மணிவண்ணன்(வயது32) ஓட்டினார். அவருடன் உறவினர்களான சவுந்தர்யா(16), சண்முகவள்ளி(18) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவிலில் இருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலைக்கு நெல் மூட்டை ஏற்றி கொண்டு ஒரு லாரி  சென்றது. இந்நிலையில்    காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டானா அருகே 2 லாரிகளும் மோதின.

    இதில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி போலீஸ் நிலைய  தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் ஞான எடிசன்(27) சிறு காயத்துடன் உயிர் தப்பினார். மற்றொரு லாரி பலத்த சேதமடைந்தது. அதில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

    காயமடைந்த 4 பேரையும் பொதுமக்கள்-போலீசார் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தினர்.
    Next Story
    ×