search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

    21 வயது பூர்த்தியடைந்தவர், தொழில் பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களில் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற ஜூன் மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்க ளாக கலந்து கொள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர், ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர், அலைடு பிரிவில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். 

    திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். 

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு 9 எஸ்.சி.வி.டி. சேர்க்கை பெற்றவர், மாநில தொழிற்பயிற்சி குழுமத்தின் பயிற்சியாளர்கள் தனித் தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    21 வயது பூர்த்தியடைந்தவர், தொழில் பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களில் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகு தியுடையவர்கள் www.skilltrining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 22-ந்தேதிக்குள் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். முதல்நிலைத்தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதி நடக்கிறது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×