என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நவீன் குமார் கல்லூரியில் தன்னுடன்படித்த ஒரு மாணவியை காதலித்து வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 59). பனியன் கம்பெனி உரிமையாளர். இவரது மகன் நவீன்குமார் (26). பட்டதாரியான இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார்.
இந்த நிலையில் நவீன் குமார் கல்லூரியில் தன்னுடன் படித்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இது குறித்து நவீன்குமாருக்கு நண்பர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சோகமாக இருந்தார்.
மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






