என் மலர்
செய்திகள்

மெட்ரோ ரெயில்
இன்று முதல் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்
சென்னையில் பெய்த கனமழை காரணமாக மெட்ரோ ரெயில்கள் கடந்த சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கியது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை 9 ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்
Next Story