search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
    X
    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

    கனமழையால் வீடுகள், பயிர்கள் சேதம்: நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

    சென்னை அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியிலும் காற்றுடன் கனமழை பெய்ததால் பயிர்கள், வீடுகள் சேதமடைந்தன.
    வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது.

    அதன்பின் திசைமாறி சென்னைக்கு அருகே கரையை கடந்தது. என்றாலும் புதுச்சேரியிலும், காரைக்கால் மாவட்டத்திலும் அதி கனமழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க சேதம் குறித்த விபர அறிக்கை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் நிவாரணம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலயைில், ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பாதிப்படைந்த மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார்.
    Next Story
    ×