என் மலர்
செய்திகள்

திருச்சி அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது40). இவர் அதே பகுதியில் மாடுவியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது35). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜன் மாட்டு வியாபாரி சங்கரிடம் மாடு ஒன்றை பெற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்துள்ளார். பின்னர் மாடு விற்பனை செய்த பணத்தை நீண்ட நாட்களாக வியாபாரி சங்கர் இடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், நடராஜனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த நடராஜன் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.