search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி காவலாளி பலி
    X
    மின்சாரம் தாக்கி காவலாளி பலி

    மந்தைவெளியில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி - வெள்ளத்தில் நடந்து சென்ற போது பரிதாபம்

    காவலாளி உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ அருகே மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதன் அருகில் போக்குவரத்து சிக்னல் கம்பமும், மின் கம்பமும் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த சக்திவேல் பணி முடிந்து வெள்ளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது வெள்ளத்தில் பாய்ந்து இருந்த மின்சாரம் சக்திவேல் மீது தாக்கியது. இதில் வெள்ளத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    போக்குவரத்து சிக்னல் கம்பம் மற்றும் மின் கம்பம் அருகில் சிறிய மின்சாதன பெட்டி உள்ளது. அதில் இருந்துதான் மின்சாரம் பாய்ந்து சக்திவேலின் உயிரை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீஸ் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் போலீசார் காவலாளியின் உடலை வெள்ளத்தில் இறங்கி மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதார் அட்டையை வைத்துதான் அவரது பெயர் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் திருவல்லிக்கேணி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அஅங்கு சென்று விசாரித்த போது சக்திவேல் மாதவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தது தெரியவந்ததது.

    சக்திவேலுக்கு 50 வயதாகிறது. அவர் உயிரிழந்ததை பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சக்திவேலின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அடுத்து மந்தைவெளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சக்திவேல் உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே சக்திவேல் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×