search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விவசாயிகள் 15ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் - திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

    பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.532 ஐ செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிர்களுக்கு வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட  கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

    மாவட்டத்தில் செப்டம்பர் 2021 மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு சிறப்பு பருவமாக எதிர்பாராத இயற்கை இடர் பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருவாய் கிடைக்கும் வகையில் திருந்திய பிரதம மந்திரி பயிர் க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் மற்றும் வெள்ளக்கோவில் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்- பயிருக்கு நவம்பர் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதில் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.532 ஐ செலுத்தி பயிர் க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர்களை கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்: மூ.லீலாவதி (தாராபுரம்): 94424-34863, ஆ.ரவி (காங்கயம்) : 94434-75398, சு.ராஜேஸ்வரி (மடத்துக்குளம்) : 94437-14513, எஸ்.தேவி (உடுமலை) : 99445-57552, எஸ்.பொன்னுசாமி (வெள்ளக்கோவில்) :98651-32354 ஆகிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×