search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    X
    காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    காரைக்காலில் இன்று 17 செ.மீ. மழை பதிவு

    காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள வயல்களில் தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது.
    காரைக்கால்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், காரைக்காலில் நேற்று காலை முதல் லேசாக மழை பெய்து வந்தது. இந்த மழை பிற்பகல் 3 மணிக்கு மேல் வெளுத்து வாங்கியது. அதன் பின்னர் நேற்று இரவில் இருந்து காலை வரை பலத்த மழை கொட்டியது.

    இதனால், காரைக்காலின் பாரதியார் சாலை, காமராஜர் சாலை, பி.கே.சாலை மற்றும் ஏராளமான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. வாகனங்கள், முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலுமான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கடலோர மீனவ கிராமங்கள், நெடுங்காடு, திருநள்ளாறு மற்றும் நகர் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளுக்கும், அரசுத்துறை அதிகாரிகளுடன் சென்று, மழை நீர் வடிவதை ஆய்வு செய்தார். மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் அங்குள்ளோரிடம் கேட்டறிந்தார். அதேபோல், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிகாபட், மழை பாதிப்பை பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள வயல்களில் தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. மழை நீரை சேமிக்க பொதுப்பணித்துறையினர் முறையான வழிவகை செய்யாததால், ஆறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, வீணாக கடலில் கலக்கிறது. மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காரைக்காலில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை வரை 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    Next Story
    ×