search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிரை காணலாம்
    X
    மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிரை காணலாம்

    அதிகனமழையால் பாதிப்பு என்ன இருக்கும்?

    அதி கனமழையால் மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும். ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் சில இடங்களில் கன மழை முதல் அதி கனமழையால் எந்த அளவில் பாதிப்பு இருக்கும்?, என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

    * சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். நகர்ப்புறங்களில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்.

    * சேதம் அடைந்த நிலையில் இருக்கும் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

    * மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும்.

    * ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.

    * வெள்ளம் காரணமாக தோட்டக்கலை மற்றும் வளர்ந்து இருக்கும் பயிர்கள் சேதம் அடையும்.

    * சில நதிநீர் பிடிப்புகளாக இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

    * கடலோர பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடைவிதிக்கலாம்.


    Next Story
    ×