என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டை பகுதியில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜோலார்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் 17 வயதுடைய சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அந்த சிறுமி உறவினர் பெண் ஒருவருடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (வயது 21) என்பவர் தனது பைக்கில் சிறுமியை கடத்தி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தியதாக சதிசை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×