என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில்  அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை தயார் செய்யுங்கள் - நிர்வாகிகளுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்

    திருப்பூர் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாகும். மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் புதிய வாக்காளர் சேர்ப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    திருப்பூர் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாகும். மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். இதுதவிர காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சிகள், முத்தூர் பேரூராட்சியிலும் மிகப்பெரிய வெற் றியை பெற நாம் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு என்பது அந்தந்த டிவிசன் நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். 

    ஒவ்வொரு வார்டுக்கும் ஒருமித்த கருத்தோடு ஒருவரை தேர்வு செய்தால் தலைமையிடம் தெரிவித்து எந்தவித மாறுதலும் இல்லாமல் அவர் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் இருந்தால் 1,2,3 என்று தேர்வு செய்து தெரிவிக்கலாம். 

    வேட்பாளர் தேர்வு முற்றிலும் வெளிப்படையாக இருக்கும். அதில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள். வருகிற 13ந் தேதி மாலைக்குள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த விவரங்களை டிவிசன் நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    கட்சியின் தலைமைக்கு தெரிவித்து முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்க முடியும். புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை திறம்பட செய்ய வேண்டும். 

    மாநகராட்சி பகுதியில் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கான எல்லை வரையறை பட்டியலை பெற்று வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஷ்வரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×