என் மலர்
செய்திகள்

கொள்ளை
மதுரையில் போலீஸ் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரையில் போலீஸ் வேடத்தில் வந்து பெண்ணிடம் 21 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை காமராஜர் சாலை, கிருஷ்ணமூர்த்தி மனைவி பொற்செல்வி (வயது 54). இவர் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு 2 பேர் வந்தனர். “நாங்கள் போலீஸ். நீங்கள் கழுத்து நிறைய நகைகள் அணிந்துள்ளீர்கள். இங்கு வழிப்பறி கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி தாருங்கள். அதனை நாங்கள் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து தருகிறோம்”என்று கூறினர்.
இதனை நம்பிய பொற்செல்வி கழுத்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்த 21 பவுன் தங்க நகைகளை கழற்றி கொடுத்தார். அதனை இருவரும் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.
பொற்செல்வி வீட்டுக்கு சென்று அந்த பேப்பரை திறந்து பார்த்தார். அதில் நகைகள் இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் 2 வாலிபர்களும் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பொற்செல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story