என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைபாக்கம் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுவதை படத்தில் காணலாம்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வேகமாக நிரம்பும் ஏரிகள்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி மற்றும் பிள்ளைப்பாக்கம் எரிகள் முழு கொள்ளளவு எட்டி வருகிறது. ஏரியில் உள்ள கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் உளிட்ட பகுதியில் உள்ள 58 ஊராட்சிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் செல்லப் பெருமாள் நகரில் தாழ்வான பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் 26 பேரை வருவாய் துறையினர் மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்து உள்ளனர்.
சிவந்தாங்கள் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் 56 பேரை மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைத்து மருத்துவ வசதி, உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும் மழை தொடரந்து பெய்து வருவதால் வருவாய் துறை, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்ந்து உள்ள இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

Next Story