search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பள்ளி மாணவர்களுக்கு முத்தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் விபரம் குறித்த பட்டியல் வழங்கப்பட்ட நிலையில் 1.32 லட்சம் தடுப்பூசி மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா தொற்று பரவல் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுகிறது. 1 முதல் 8- ம்வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்டவை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வராமல் தடுக்க அனைத்து மாவட்டங்களில் உள்ள 5  முதல் 6 வயதுடையோருக்கு ஒரு பகுதியாகவும், 10 முதல் 16 வயதுடையோருக்கு மற்றொரு பகுதியாகவும் தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் விபரம் குறித்த பட்டியல் வழங்கப்பட்ட நிலையில் 1.32 லட்சம் தடுப்பூசி மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    டிசம்பர் 20-ந்தேதி வரை பள்ளி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×