search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கட்டண உயர்வு - பவர் டேபிள் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

    பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானபின் மீண்டும் பேசி பவர்டேபிள் கட்டண உயர்வு ஒப்பந்தம் நிர்ணயிப்பது என முடிவு செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்துக்கொடுக்கின்றன. ‘சைமா’ - பவர்டேபிள் சங்கங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில்  பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 

    இரு சங்கங்களிடையே கடந்த 2016-ல் போடப்பட்ட ஒப்பந்தம் 2020 அக்டோபரில் காலாவதியானது. கொரோனாவால்  புதிய ஒப்பந்த பேச்சு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தாண்டு கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்  டஜனுக்கு 6 ரூபாய் கட்டண உயர்வு நிர்ணயித்து இரு சங்கங்களும் இணைந்து இடைக்கால ஒப்பந்தம் மேற்கொண்டன.

    பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானபின் மீண்டும் பேசி  பவர்டேபிள் கட்டண உயர்வு ஒப்பந்தம் நிர்ணயிப்பது என முடிவு செய்யப்பட்டது. 

    கடந்த  செப்டம்பர்  மாத இறுதியில் பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து  கட்டண உயர்வு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி பவர்டேபிள் நிறுவனங்கள் ‘சைமா’வுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.

    தீபாவளி பண்டிகை விடுமுறைக்குப்பின் பின்னலாடை துறை  மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. 

    எனவே ‘சைமா’ சங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் பவர்டேபிள் துறையினர் காத்திருக்கின்றனர். 
    Next Story
    ×