என் மலர்

  செய்திகள்

  புதுவை நடேசன் நகரில் குடியிருப்புகளை சுற்றி குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்
  X
  புதுவை நடேசன் நகரில் குடியிருப்புகளை சுற்றி குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்

  ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை- புதுச்சேரியில் 26 ஏரிகள் நிரம்பின

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது.
  புதுச்சேரி:

  புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி 26 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இதில் தற்போது 9 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 7.21 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும்.

  முருங்கப்பாக்கம், உழந்தை கீரப்பாளையம், சோரப்பட்டு, வம்புபட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. மீதம் உள்ள 58 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

  Next Story
  ×