என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரி
    X
    ஏரி

    காஞ்சிபுரம், திருவள்ளூர்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 288 ஏரிகள் நிரம்பின

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 288 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்று பாசன பகுதியில் 574 ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 30 ஏரிகள் 75 சதவீதமும், 49 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 24 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. ஏரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பிச்சாட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

    இந்த தண்ணீர் ரெட்டிபாளையம், தடுப்பணை ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரியில் சென்று கடலில் கலக்கின்றன. இதனால் பழவேற்காடு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுறது.

    பொன்னேரி, மீஞ்சூர், கோளூர், திருப்பாலைவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெற்பயிரில் மழை நீர் தேங்கி காணப்படுவதால் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகன் கூறியதாவது:-

    பொதுப் பணித்துறை நீர்வள துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் ஆரணி ஆறு உள்ளது. இதன் கீழ் 250 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்த மழையில் 59 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    மீதம் உள்ள 191 ஏரிகள் பாதி நிரம்பியுள்ளன ஆரணி ஆற்றின் கரை பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 10 ஆயிரம் மணல் மூட்டைகள், கயிறு, சவுக்கு தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல், திருப்புட்குழி, சோமங்கலம், பரந்தூர், ஆற்றுப்பாக்கம், மதுரைமங்களம், தண்டலம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் உள்பட 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    145 ஏரிகள் 75 சதவீதமும், 35 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 188 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 265 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது.

    இதையும் படியுங்கள்... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்குகிறது- அமைச்சரவை குழு பரிந்துரை


    Next Story
    ×