என் மலர்

  செய்திகள்

  வாலிபர் தற்கொலை
  X
  வாலிபர் தற்கொலை

  காட்பாடி லாட்ஜில் கோவை வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காட்பாடி லாட்ஜில் வெளிமாவட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வேலூர்:

  கோவை மாவட்டம் வெள்ளாலூர் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் நவநீதன் (வயது 40). இவர் வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

  இன்று காலையில் நீண்டநேரமாகியும் நவநீதன் இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவைத் திறந்தனர். அங்குள்ள மின்விசிறியில் நவநீதன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

  அவர் எதற்காக வேலூர் வந்தார்? தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×