என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் அருகே பட்டாசு நெருப்பு விழுந்து சாக்கு குடோன் எரிந்து நாசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடோனில் தீ பிடித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே அரச்சலூர் நாச்சி வலசுவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது34). இவர் அண்ணன் சந்திரசேகருடன் சேர்ந்து காங்கயம்-சென்னிமலை ரோடு சகாயபுரத்தில் சாக்கு குடோன் நடத்தி வருகிறார். இங்கு புதிய மற்றும் பழைய சாக்கு பைகளை வாங்கி விற்று வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடோனில் தீ பிடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து காங்கயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காங்கேயம் போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது வானில் இருந்து ராக்கெட் பட்டாசு ஒன்று குடோன் அருகே வந்தது போல் தெரிந்துள்ளது.

    இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. குடோனில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய சாக்கு பைகள், பொருட்கள் என 13 லட்சம் ரூபாய் அளவிலான பொருட்கள் சேதமாகியுள்ளது.  மேலும் இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×