search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 11 இடங்களில் பட்டாசு தீ விபத்து

    தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசு வெடிக்கையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.

    இந்த தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு-மீட்புப்பணித் துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு தயார்நிலையில் இருந்தன.

    தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் 11 இடங்களில் பாட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாவது:-

    தமிழகத்தில் 346 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்

    தீபாவளியின்போது தீ விபத்து அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ந் தேதி காலை முதலே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும் ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பெரும் சேதத்தைத் தவிர்த்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×