என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்
Byமாலை மலர்5 Nov 2021 9:21 AM GMT (Updated: 5 Nov 2021 11:18 AM GMT)
தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.
தேனி:
கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த 29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். முல்லைப் பெரியாறு அணை தமிழக கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.
Next Story
×