search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகை மூட்டம்
    X
    புகை மூட்டம்

    அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பு: புகை மூட்டமாக மாறிய சென்னை

    தீபாவளி திருநாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
    தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே, சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுதான். யாராவது பட்டாசு வெடிக்கவில்லை என்றாலும், என்னப்பா... தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருக்கிறாயே... என்று கேட்பார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், காற்று மாசு அடைதலை கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்துள்ளன. காற்று மாசுபாடு ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையார்களை கருத்தில் கொண்டு காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    புகை மூட்டம்

    சென்னையில் காலையிலேயே எழுந்து குழித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, சாமி தரிசனம் செய்த பின், பட்டாசு வெடிக்க கிளம்பிய நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இதனால் காலையில் மிகப்பெரிய அளவில் பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை.

    ஆனால், நேரம் செல்ல செல்ல வானம் பளிச்சென்றாகியது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் போலீசார் தரப்பில் சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மாலை நேரம் முடிந்து இரவு வந்ததும் மக்கள் உற்சாகமாகி சக்கரம், புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பு போன்ற வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம்தான் என்பதை மனதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடிக்க ஆரம்பினர்.

    புகை மூட்டம்

    புஸ்வானம், மத்தாப்பு, சக்கரம், ராக்கெட் போன்ற வெடிகள் அதிக அளவு புகையை வெளியிடக்கூடியவை. இதனால் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பட்டாசு புகையால் சூழ்ந்து காணப்பட்டன. ஏற்கனவே, பருவமழை காரணமாக கருமேகம் சூழ்ந்து வானம் காணப்பட்ட நிலையில், பட்டாசு புகையால் பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது.

    மார்கழி மாதம் பனி சூழ்ந்து காணப்படுவதுபோல் சாலைகள் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத அளவிற்கு அவதிக்குள்ளானார்கள். நடந்து செல்பவர்களுக்கு கூட எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில் வந்த பின்னர்தான் தெரியும் அளவிற்கு மேக மூட்டமாக காணப்பட்டது.
    Next Story
    ×