என் மலர்

  செய்திகள்

  ரேஷன் அரிசி
  X
  ரேஷன் அரிசி

  கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  கோவை:

  கோவை பாலக்காடு ரோடு ஈச்சனாரி சோதனைச்சாவடியில் நேற்று மாலை பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

  அதில் கோவையில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனிஷ் (வயது 30) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×