என் மலர்
செய்திகள்

விபத்து பலி
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கபிலேஷ் (வயது 25). இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை என்ற இடத்தின் வழியாக செல்லும்போது சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மல்லையா கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் கபிலேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கம்பிலேஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






