என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

    மதுவிற்பனையை தடுக்க சென்ற போது போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்பாண்டி. இவர் மேலஇலந்தகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுண்டன்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி பசுபதி (வயது 45) என்பவர் சட்டவிரோதமாக சாக்குமூட்டையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவரை தலைமை காவலர் பிடிக்க சென்றார். அப்போது பசுபதி திடீரென்று மதுபாட்டிலை உடைத்து வேல்பாண்டிக்கு  கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
    Next Story
    ×