என் மலர்
செய்திகள்

திருப்பூர் நொய்யல் சாலை சகதிக்காடாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
தொடர் மழையால் திருப்பூரில் சகதிக்காடாக மாறிய சாலைகள்-விற்பனை பாதிப்பால் வியாபாரிகள் கவலை
மழையின் காரணமாக தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே தீபாவளி விற்பனை இல்லாத நிலையில் மழையால் விற்பனை முற்றிலும் முடங்கியது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் இரவு வரை பெய்தது.
இதனால் திருப்பூர் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் சிதலமடைந்திருந்த சாலைகள் சகதிக்காடாக மாறின. இதனால் அந்த வழியாகசெல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொடர் மழையால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இருப்பினும் தீபாவளி பண்டிக்கைகாக ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க இருந்த பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் கடைகளுக்கு சென்றனர்.
மழையின் காரணமாக தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே தீபாவளி விற்பனை இல்லாத நிலையில் மழையால் விற்பனை முற்றிலும் முடங்கியது. இன்றும்,நாளை மட்டுமே தீபாவளி விற்பனை உள்ள நிலையில் மழை பெய்தால் இந்த வருடம் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொடர் மழையால் திருப்பூர் மாநகரின் பல இடங்களில் சாக்கடையுடன் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசு ஒழிப்பு பணியையும் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






