search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை ஏற்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை எம்.எஸ்.எம்.இ. வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்தத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்தத் தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அரசாக தி.மு.க. அரசு மாறி விட்டது.

    இது குறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்று பதிலளித்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

    2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22(2)-ல் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தில் இடமில்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடும் இது தான்.

    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

    Next Story
    ×