search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை படத்தில் காணலாம்.
    X
    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பைகளில் இருந்த ரூ.5½ லட்சம் கஞ்சா

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கேட்பாரற்று 3 பைகளில் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கிடந்தது. இது தொடர்பாக போலீசார் செல்போன் ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணிகளில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பைகள் கிடந்தன. அந்த பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. பைகளில் இருந்த 56 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    அந்த கஞ்சாவுடன் உள்ளே ஒரு செல்போனும் இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் மூலமாக கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பைகளை போட்டு சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×