search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாட்டறம்பள்ளியில் முதியவரின் ஓட்டை மாற்றிப்போட்டதாக துப்புரவு பெண் பணியாளர் மீது புகார்

    துப்புரவு பெண் பணியாளர் மீது தொடுக்கப்பட்ட புகார் மனுவை சென்னை தேர்தல் ஆணையாளர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகிய இருவருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கொண்டகிந்தனப்பள்ளி குண்டு கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது93). இவர் கடந்த 6-ந்தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்ய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் துப்புரவு பணியாளர் முதியவரின் வாக்குச்சீட்டை பிடிங்கி அவர் விருப்பத்திற்கு மாற்றாக வாக்கினை பதிவு செய்து வாக்குப் பெட்டியல் போட்டார்.

    அதிர்ச்சி அடைந்த முதியவர் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தார். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மறு ஓட்டு கேட்டு அனுமதி கேட்டேன் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் ராமசாமி வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பெண் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த வாக்குச் சீட்டு ரத்து செய்துவிட்டு என் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் எனது வாக்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.

    மேலும் இந்த புகார் மனுவை சென்னை தேர்தல் ஆணையாளர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகிய இருவருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×