search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கம்.
    X
    ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கம்.

    ராஜபாளையத்தில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    ராஜபாளையத்தில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 6-வது மைல் நீர்தேக்கம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் அய்யனார் கோவில் ஆற்றிற்கு வரும். பின்னர் அங்கிருந்து உந்துதல் குழாய் மூலம் 6-வது மைல் நீர்தேக்கத்திற்கு வருகிறது. இதையடுத்து சுத்திகரிப்பு மையத்திற்கு செல்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராஜபாளையம் நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

    இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீரின் சுவை மாறியுள்ளது. அதற்கு காரணம் குடிநீரில் ஆழ்துளை கிணற்றில் இருந்து உப்பு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் பராமரிப்பு பணியான கல் மற்றும் மண் மாற்றும் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஆதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பழைய மணலையும், கல்லையும் முழுவதுமாக எடுத்துவிட்டு புதிய கல் மற்றும் மணலை மாற்ற வேண்டும். அப்போது தான் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ஆதலால் இந்த பணியை நகராட்சி நிர்வாகம் உடனே தொடங்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆழ்துளை கிணற்றில் உப்பு தண்ணீர் கலக்காமல் வினியோகம் செய்தால் குடிநீரின் பழைய சுவை ராஜபாளையம் மக்களுக்கு கிடைக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×