என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளைப்புலிகள் உள்ள இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
    X
    வெள்ளைப்புலிகள் உள்ள இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் பூங்காவில் விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகை

    உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களில் உள்ள 2382 விலங்குகள் இயற்கையில் உள்ளது போன்ற சூழலில் சிறந்த பராமரிபுடன் வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஒரு வலுவான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கையாள்கிறோம்.

    கொரோனா தொற்று நோயினால் உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 வரை சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது.

    இந்த உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம் உயிரியல் பூங்காவிற்கு விலங்கு தகவல் பலகைகளைப் புதுப்பிக்கவும், விலங்குகளின் இருப்பிடங்களில் விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் தெரு விளக்குகள், 14 பேர் அமரும் பேட்டரி வாகனங்கள் இரண்டும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வழங்கி உள்ளது.

    இந்த வசதிகள் உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ‘விஷ்ணு’ என்ற சிங்கத்தையும் பிரக்ருதி என்ற யானையையும் 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து விலங்குகள் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இதையும் படியுங்கள்... கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 12,161 பேருக்கு கொரோனா

    Next Story
    ×