என் மலர்
செய்திகள்

வக்கீல் அலுவலகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்ததாக கூறி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சை:
தஞ்சாவூரில் கடந்த 16.7.21 அன்று வழக்கறிஞர் காமராஜ் அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் காமராஜ் கூறும்போது, எனது அலுவலத்தில் கடந்த 16ம்தேதி அதிகாலை 4 மணிக்கு போலீசார் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கம்ப்யூட்டர், பென் டிரைவ், நீதிமன்ற கோப்புகள் எடுத்து சென்றதோடு கதவு, ஜன்னல ஆகியவற்றை அடித்து உடைத்தனர்.
இதுகுறித்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி அலுவலத்தில் உள்ள இமானுவேல் புகைப்படத்தை சேதப்படுத்தி விட்டு சென்றனர். அதனை தொடர்ந்து கடந்த 23, 24-ந்தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தோம்
உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் இன்று கோர்ட் புறக்கணிப்பு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.