search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகளுக்கு 6547 வேட்பாளர்கள் போட்டி

    வேலூர்மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகளுக்கு 6547 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 83 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1224 பேர் பேட்புமனுவை திரும்ப பெற்றனர்.

    316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தம் இறுதியாக 6547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

    14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 70 பேர் உள்ளனர்.

    138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 12 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 503 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

    247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 820 பேர் இறுதியாக களத்தில் போட்டியிடுகின்றனர்.

    ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 52 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5154 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
    Next Story
    ×